இந்தியா, மார்ச் 25 -- என் வீட்டில் நடந்த தாக்குதலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் ஆகியோர் காரணம் என யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் குற்றம்சாட்டி இருந்தார். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தை, சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீசப்பட்ட சம்பவத்திற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக புதிய தலைமுறை டிவி சேனலுக்கு அவர் அளித்துள்ள விளக்கம் இதோ.. சவுக்கு சங்கர் வீட்டில் மலம் வீசப்பட்ட சம்பவத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வளவு காலமாக மலத்தை அள்ளிவிட்டு அந்த கையை சுத்தம் செய்துவிட்டு சாப்பிடும் அவல நிலை இருந்தது. அந்த அவல நிலையை ஒரு திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மாற்றி இருக்கி...