இந்தியா, ஏப்ரல் 24 -- முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயோனைஸுக்கு ஓராண்டு காலத்துக்கு தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், மயோனைஸை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும் விற்பனை செய்யவும் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது.

ஷவர்மா, தந்தூரி போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் மயோனைஸில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதால் நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு இருப்பதாக இது குறித்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, மயோனைஸ் செய்ய பச்சை முட்டையைப் பயன்படுத்துவதால், கிருமிகள் தொற்று அதிகரிக்க வாய்ப்பு என்றும், சால்மோனெல்லா பாக்டீரியா காரணமாக இது விஷமாக மாறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், முட்டையில் செய்யக்கூடிய மயோனைஸில் ஒவ்வாமை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து மிக அதிகம் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சில உணவகங்களில் மயோனைஸ்...