இந்தியா, பிப்ரவரி 28 -- புஷ்கர் - காயத்ரி ஆகியோர் எழுத்தில் சுழல்: தி வோர்டக்ஸ் சீரிஸ் பிப்ரவரி 28ஆம் தேதி அமேஸான் பிரைமில் ரிலீஸாகிறது.

விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கி பிரபலமடைந்த இயக்குநர் ஜோடி புஷ்கர் மற்றும் காயத்திரி. இந்த ஜோடி, சுழல் 2ஆம் பாகத்தொடருடன் வந்துள்ளது. இந்தத் தொடரில் அதன் முக்கிய கதாபாத்திரங்களான நந்தினி (ஐஸ்வர்யா ராஜேஷ்) மற்றும் சர்க்கரை (கதிர்) ஆகியோர், சுழல் 2-ல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சுழலின் இரண்டாம் பாகம், முதல் சீசனின் கிளைமேக்ஸில் இருந்து தொடங்குகிறது. சுழலின் கதையின்படி, நந்தினி சிறையில் நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொள்கிறார். அதே நேரத்தில், அவரது நண்பரும் சப்-இன்ஸ்பெக்டருமான சர்க்கரை ஒரு கொடூரமான வரலாற்றைக் கொண்ட ஒரு மர்மமான கிராமத்தை அடைகிறார்.

அங்கு நடக்கும் எதிர்பாராத கொலை, அந்த ஊர்க்கா...