இந்தியா, ஏப்ரல் 28 -- சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் மனோ தங்கராஜுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பத்மநாபபுரம் சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், ஏழு மாத இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்நாடு அமைச்சரவையில் பதவி ஏற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் ஆளுநர் ஆர்.என். ரவி முன்னிலையில் இவர் பதவியேற்றார்.

மேலும் படிக்க:- 'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' ஈபிஎஸ்க்கு ஆர்.எஸ்.பாரதி சரமாரி கேள்வி

ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழா மாலை 6 மணிக்கு தொடங்கியது. முதலில் நாட்டுப்பண்ணும் பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டு நிகழ்ச்சி தொடங்கியது. ஆளுநர் ஆர்.ரவி, மனோ தங்கராஜுக்கு பதவி பிரமாணமும், பின்னர் ரகசிய கா...