இந்தியா, மே 5 -- மதுரை ஆதீன மடத்தை களங்கப்படுத்தும் விதமாக மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் செயல்படும் மதுரை ஆதீனத்தை பதவிநீக்கம் செய்யக்கோரி இந்து மக்கள் கட்சி அறிக்கை வெளியிட்டு உள்ளது.

மதுரை ஆதீனத்தின் சமீபத்திய செயல்பாடுகள் மற்றும் கார் விபத்து தொடர்பாக அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகள், மதுரை ஆதீன மடத்தின் புனிதத்தை களங்கப்படுத்துவதாகவும், மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் நடப்பதாகவும் குற்றம்சாட்டி, இந்து மக்கள் கட்சி அவரை பதவி நீக்கம் செய்யக் கோரி அறிக்கை வெளியிட்டுள்ளது. 293-வது மதுரை ஆதீனமான திருஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார், மடத்தின் மரபுகளை மீறி தான்தோன்றித்தனமாக செயல்படுவதாகவும் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க:- 'பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா?' ஆர்.எஸ்.பாரதி கேள்வி

கடந்த பிப்ரவரி 20...