இந்தியா, ஜூலை 19 -- தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கார்த்தி. இவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர்கள் வெறும் ரசிகர்கள் மட்டுமில்லாமல் மாவட்டம் தோறும் பொது மக்களுக்கு பல நல்ல விஷயங்களை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் கடந்த மே 25 ஆம் தேதி நடிகர் கார்த்தி தனது 48வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுக்க ரசிகர்கள் பல்வேறு அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். சென்னையில் உள்ள ரசிகர்கள் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இரத்த தானம் செய்தார்கள். இவ்வாறு இரத்த தானம் செய்தவர்களில் 250 ரசிகர்களை நடிகர் கார்த்தி நேரில் சந்தித்தார்.

சென்னை தியாகராய நகரில் இரத்த தானம் செய்தவர்களுக்கு நடிகர் கார்த்தி சான்றிதழ் வழங்கி, விருந்தளித்தார். மே...