இந்தியா, ஏப்ரல் 24 -- சுந்தர் சி இயக்கத்தில் நடிகர் வடிவேலு நடித்திருக்கும் 'கேங்கர்ஸ்' திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், அந்த படம் தொடர்பாக Behindwoods யூடியூப் சேனலுக்கு அவர் சமீபத்தில் அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. அதில், வடிவேலு நடிகர் ராஜ்கிரண் தனக்கு செய்த உதவிகள் குறித்து எமோஷனலாக பேசியிருந்தார்.

சமீபத்தில் நடிகர் வடிவேலு Behindwoods யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில் 'நீயா நானா' நிகழ்ச்சி புகழ் கோபிநாத் வடிவேலுவிடம் கேள்வி கேட்கிறார். அப்போது அவர் நடிகர் ராஜ்கிரணுக்கும் உங்களுக்குமான உறவு பற்றி சொல்லுங்கள் என்று கேள்வி கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த வடிவேலு, நீங்கதான் நான் ரொம்ப நாளா சொல்லணும்னு நினைச்சுட்டு இருந்த பதிலுக்கு சரியான கேள்வியை கேட்டு இருக்கீங்க. இப்போ நான் உண்மையை சொல்லியே ஆகணும்.

ஒ...