இந்தியா, மார்ச் 23 -- ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'மதராஸி'. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் ஆரம்பமானது. கடந்த ஆண்டே படப்பிடிப்பு முடிந்து வெளியாகி இருக்க வேண்டிய நிலையில்,

சல்மான்கான் நடிப்பில் 'சிக்கந்தர்' படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்ததால் அந்த படத்தில் கமிட் ஆனார் முருகதாஸ். இந்நிலையில், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில், 'மதராஸி' படம் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார் முருகதாஸ்.

இதுகுறித்து ஏ.ஆர்.முருகதாஸ் அளித்துள்ள பேட்டியில், சில வருடங்களுக்கு முன்பு பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அது நடக்கவில்லை என்று முருகதாஸ் கூறினார். மேலும் அவர் கூறுகையில், ந...