இந்தியா, ஏப்ரல் 28 -- 'மங்குனி மந்திரிசபை நடத்திவிட்டு தி.மு.க. அமைச்சரவையை விமர்சிக்க வெட்கமில்லையா?' என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பி உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், செந்தில் பாலாஜி, பொன்முடியின் பதவி விலகல் குறித்து கருத்து தெரிவித்திருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, ''திமுக ஆட்சியின் பாதாள வீழ்ச்சி ஆரம்பித்து விட்டது. ஆட்சி மாற்றத்திற்கான விதைகள் துளிர்விடத் துவங்கி விட்டன'' எனச் சொல்லியிருக்கிறார்.

மேலும் படிக்க:- கோவையில் விஜய்க்கு டஃப் கொடுத்த உதய்! விமான நிலையம் முதல் ரோட்ஷோ! ஒரு கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

'தேர்தலில் தோற்றால் கூட பரவாயில்லை. அடுத்த தேர்தலில் வெல்ல முடியும். ஆனால், கட்சி வீழ்ந்தால் தேர்தலில் வெற்றி...