கோவை,கடலூர், ஜூன் 27 -- 2026 சட்டமன்ற தேர்தல் சூடுபிடிக்கும் நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தேர்தல் பிரசாரத்தை, ஜூலை 7 ம் தேதி, கோவையில் தொடங்குகிறார். அதிமுகவின் பலமான மண்டலமாக கருதப்படும் கோவையில், மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிகளில் முதல் நாள் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.

அதன் பின் ஜூலை 8 ம் தேதி, கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட கோவை வடக்கு மற்றும் கோவை தெற்கு தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

அதே போல, ஜூன்10 ம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில், விழுப்புரம் தொகுதி, விக்கிரவாண்டி தொகுதி, திண்டிவனம் தொகுதிகளில் பிரசாரம் செய்ய உள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் பயண முழு விபரம் இதோ:

அதனைத் தொடர்ந்து, கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் கி...