டெல்லி, மார்ச் 25 -- டெல்லியில் ரேகா குப்தா தலைமையிலான பாஜக அரசு செவ்வாய்க்கிழமை சட்டமன்றத்தில் தனது முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்து, சிஎம் ஸ்ரீ பள்ளிகள், மொழி ஆய்வகங்கள், நவீன கணினி ஆய்வகங்கள் மற்றும் தொழில் தொடங்குதல் ஆதரவு மையங்கள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை அறிவித்தது.

2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. ஒரு லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட 31.5 சதவீதம் அதிகம். கடந்த மாத சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியை வீழ்த்தி, 26 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக அரசு அமைத்த பின்னர் வெளியிடப்பட்ட முதல் பட்ஜெட் இது.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....