இந்தியா, ஏப்ரல் 19 -- சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள முதல் திரைப்படம் ரெட்ரோ. மே 1 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரைலர், திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற பிரமாண்ட விழாவில் இந்த ட்ரைலர் வெளியிடப்பட்டது.

ரெட்ரோ ட்ரைலர் வெளியீடு

பிட்சா போன்ற திகில் படங்களை இயக்கி ரசிகர்களை அச்சுறுத்திய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ரெட்ரோ. சூர்யா நடித்துள்ள இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். மே 1 ஆம் தேதி வெளியாக உள்ள இந்தப் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் மொழியில் வெளியாகும் இந்தப் படத்தின் ட்ரைலர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழியிலும் வெளியிடப்பட்டுள்ளத...