இந்தியா, பிப்ரவரி 28 -- 'போலீஸ் முன் எனக்கு வசதியான நேரத்தில்தான் என்னால் ஆஜராக முடியும்' என ஆம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

சம்மனை வீட்டில் கொடுத்துவிட்டு சென்று இருக்கலாம். ஆனால் கதவில் ஒட்டிவிட்டு என்று உள்ளனர். கதவில் ஒட்டினால், எனக்கு பதிலாக கதவு வந்து உங்களுக்கு விளக்கம் தர போகிறதா?. சம்மன் ஒட்டும் இடத்தில் ஊடகங்கள் வந்தது எப்படி?; நான் ஏற்கெனவே வந்து விளக்கம் அளித்து உள்ளேன். வளசரவாக்கம் காவல் நிலையத்தில் உள்ள வழக்கிற்கு, நீலாங்கரையில் உள்ள போலீஸுக்கு என்ன வேலை. அழைப்பானை நான் படிக்கவா?; நாட்டு மக்கள் படிக்கவா?

அழைப்பாணையை கிழிப்பது அவ்வளவு பெரிய குற்றமா?; என் வீட்டில் கைது செய்யப்பட்டவர்களை நேரடியாக காவல் நிலையத்திற்கு கொண்டு போகவில்லை. திடல் ஒன்றுக்கு கொண்டு சென்று அவர்களை அடித்து உள்ளனர். பின...