ஆலங்குடி,மாத்தூர், ஜூலை 24 -- மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப் பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கந்தர்வக்கோட்டையில் மக்கள் சந்திப்பு நடத்தினார். இதையடுத்து அறந்தாங்கி செல்லும் வழியில் ஆதனக்கோட்டை தஞ்சாவூர் - மானாமதுரை சாலையில், சாலையோர தொழிலாளர்களைக் கண்டதும் பேருந்தை நிறுத்தச் சொன்னார் . அங்கிருந்த பெண் வியாபாரிகளை அழைத்து முந்திரி பருப்பு வாங்கிக்கொண்டு அதற்கான தொகையைக் கொடுத்தார். அப்போது அவர்கள் பணம் வாங்க மறுக்கவே, ' இது தப்பும்மா வாங்கிக்கோங்க' என்று உரிமையுடன் வற்புறுத்தி தொகையைக் கொடுத்தார்.

ஆலங்குடிக்குச் செல்லும் வழியில் மாத்தூரில் குவிந்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்ததும், பேருந்தின் உள்ளிருந்தே பேசத் தொடங்கினார் இபிஎஸ். "இந்தப் பகுதி விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் நிறைந்த பகு...