இந்தியா, மே 11 -- இந்தியாவுடன் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை "விசுவாசமாக செயல்படுத்துவதில் உறுதியாக இருப்பதாக" பாகிஸ்தான் ஞாயிற்றுக்கிழமை கூறியுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒப்பந்தத்தை மீறியதாக புது தில்லி குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்தப் பதிலை அளித்துள்ளது.

மேலும் படிக்க| போர் நிறுத்தம் அறிவித்தும் அத்துமீறும் பாகிஸ்தான்: ஜம்மு முதல் ஜெய்சால்மர் வரை பதட்டம்.. 3 மாநிலங்களில்மின்தடை!

நாட்டின் வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து பேசுகையில், "சூழ்நிலையை பொறுப்புடனும் கட்டுப்பாட்டுடனும் ராணுவ படைகள் கையாளுகின்றன" என்று கூறியது. அத்தடன், இந்தியா தான் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் "மீறல்களைச்" செய்ததாகக் குற்றம் சாட்டியது.

"யுத்த நிறுத்தத்தை சுமூகமாக செயல்படுத்துவதில் ஏதேனும் சிக்...