இந்தியா, ஏப்ரல் 14 -- பொன்முடியின் சர்ச்சை பேச்சு விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகள் கண்டனம் தெரிவிக்காதது ஏன் என மூத்த பத்திகையாளர் மணி கேள்வி எழுப்பி உள்ளார்.

சைவ, வைணவ சமய குறியீடுகளை உடலுறவு உடன் ஒப்பீடு செய்து பேசிய வனத்துறை அமைச்சர் பொன்முடியின் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி ஆவேசமாக விமர்சித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், திராவிடர் கழக மேடையில் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பொன்முடி பேசியதாக எழுந்த குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரங்களில் பெரும் புயலை கிளப்பியுள்ளது. இதற்கு திமுக எடுத்த நடவடிக்கை போதுமானதல்ல என்று மணி குற்றம்சாட்டி உள்ளார்.

தந்தை பெரியார் திராவிடர் கழக நிகழ்ச்சியில் பேசிய பொன்முடி, பெண்களைப் பற்றி ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதாகவும், சைவ-வைணவ மத உணர்வு...