இந்தியா, மார்ச் 6 -- மிருகம், ஈரம், மரகத நாணயம், அரவான் ஆகியப் படங்களில் நடித்து பிரபலமானவர், நடிகர் ஆதி. இவரும் நடிகை நிக்கி கல்ராணியும் காதலித்து 2022ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் நடிகர் ஆதியின் நடிப்பில் ' சப்தம்'படம் ரிலீஸாகியிருக்கிறது. இப்படத்தின் புரொமோஷன் தொடர்பாக நடிகர் ஆதி பல்வேறு ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு நடிகர் ஆதி பேட்டியளித்தார். அந்தப் பேட்டியை ஆதியின் மனைவி நிக்கி கல்ராணி எடுத்து இருந்தார். இந்த கலகலப்பான பேட்டி, பிஹைண்ட்வுட்ஸ் யூடியூபில் மார்ச் 3ஆம் தேதி ரிலீஸாகியிருக்கிறது. அதன் தொகுப்பு..

சினிமா என்பது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாறும். இந்த வெள்ளிக்கிழமை சூப்பர் ஹிட்டானால் தூக்கி மேல வைச்சு கொண்டாடுவாங்க. அது உண்மை. அதுதான் சினிமா. அது தப்புன்...