இந்தியா, ஏப்ரல் 23 -- குட் பேட் அக்லி படத்தில் தன்னுடைய பாடல்கள் பயன்படுத்திற்கு நஷ்ட ஈடு கேட்டு இளையராஜா படத்தின் படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய நிலையில், அவரது அண்ணனும் இயக்குநருமான கங்கை அமரன் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்திருந்தார். குறிப்பாக இளையராஜா பாடல்கள் படத்தில் இருந்த காரணத்தினால்தான் படம் ஹிட் ஆகிறது என்றெல்லாம் பேசி இருந்தார். இதற்கு அவரது மகனும் நடிகரும், இசைகலைஞருமான பிரேம்ஜி பதிலடி கொடுத்திருக்கிறார்.

இது குறித்து சென்னையில் தன்னுடைய வல்லமை படத்தின் நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய பிரேம்ஜி, 'என்னுடைய அப்பா பேசியதற்கு அனைவரும் என்னை டேக் செய்து திட்டிக் கொண்டிருந்தார்கள். அதில் என்னுடைய அப்பா அவரது அண்ணனுக்கு ஆதரவு தரும் வகையில் பேசி இருக்கிறார். என்னுடைய அண்ணனை பற்றி ஏதாவது வந்தால் நான் அவனுக்கு சப்போர்...