புதுச்சேரி,காரைக்கால், மார்ச் 12 -- 'கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எல்லாம் கிடப்பில் உள்ள நிலையில் மணக்க மணக்க பட்ஜெட் உரை நிகழ்த்தி இருக்கிறார் முதல்வர் ரெங்கசாமி என்றும், வெறும் காகிதப்பூ பட்ஜெட் ஆக உள்ளது,' என்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் சிவா கடும் விமர்சனம் செய்துள்ளார்.

புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் ஆறாவது கூட்டத்தொடரின் மூன்றாம் நாளான இன்று 2025-26-ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி பேரவையில் தாக்கல் செய்தார். இதுகுறித்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

''முதல்வர் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் புதிய வருமானம் ஏதும் இல்லாமல், ஒன்றிய அரசின் சிறப்பு நிதி ஏதும் இல்லாமல் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எதிர்வரும் தேர்தலை முன்...