இந்தியா, ஜூன் 21 -- "பிரதமர் வரக்கூடிய அளவுக்கு தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்" என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்து உள்ளார்.

சர்வதேச யோகா தினத்தையொட்டி நெல்லையில் நடந்த யோகா நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் பாஜக-அதிமுக கூட்டணி வலிமை உடன் உள்ளதாகவும், மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தவறாக பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், பிரதமர் மோடியின் தமிழக வருகை குறித்த கேள்விக்கு, "பிரதமருக்கு நிறைய வேலை இருக்கிறது, ஆனால் தமிழகத்தில் பெரிய வேலை இல்லை, அமித்ஷாவே பார்த்துக்கொள்வார்," என்று கிண்டலாக பதிலளித்தார்.

நயினார் நாகேந்திரன், மத்திய அரசு வழங்கும் திட்டங்களை தமிழக அரசு தனது பெயரில் செயல்படுத்துவதாக விமர்சித்தார். "ஆயுஷ்மான் பாரத் திட்டமாக இருந்தாலும...