இந்தியா, ஏப்ரல் 25 -- பிசியோதெரபி மருத்துவர்களுக்கு, பெயருக்கு முன் டாக்டர் என போட்டுக்கொள்ளலாம் என சொன்ன பிரதமர் மோடிஜி அவர்களுக்கு நன்றி என சோசியல் மீடியா பிரபலம் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் கூறியிருக்கிறார்.

இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ''பாரதப் பிரதமர் மோடிஜி அவர்களுக்கு பிசியோதெரபி சங்கம் சார்பாக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். 60ஆண்டுகளுக்கு அப்புறம், பிசியோதெரபி மருத்துவர்களுக்கு, பெயருக்கு முன் டாக்டர் என போட்டுக்கொள்ளலாம் எனவும், PT என போட்டுக்கொள்ளலாம் எனவும் இந்தியா முழுக்க ஒரே சட்டம் வகுத்திருக்காங்க.

பிசியோதெரபிஸ்ட்டுக்கு என்று தனியாக கவுன்சில் கிடையாது. ஏப்ரல் 23ஆம் தேதி மத்திய சுகாதார அமைச்சகம், பிசியோதெரபிஸ்ட்களுக்கு, பெயருக்கு முன் டாக்டர் என்று போட்டுக்கொள்ளலாம் என்றும்,வலியால் பாதிக்க...