Coimbatore, ஏப்ரல் 9 -- கோவை செட்டிபாளையம் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பித்தவருக்கு, முகவரி சரிபார்ப்புக்கு ரூ.1000 லஞ்சம் பெற்ற தலைமைக் காவலர் அதிரடியாக லஞ்ச ஒழிப்புத்துறையால் கைது செய்யப்பட்டார்.

கோயம்புத்தூர் செட்டிபாளையம் காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.எஸ்.பி. திவ்யா தலைமையில் 3 போலீஸார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். மேலும், விண்ணப்பதாரர்களுக்கு பாஸ்போர்ட் வழங்குவதற்கான விசாரணைக்கு லட்சம் கேட்பதாக எழுந்த புகாரில் இந்த ரெய்டு நடந்தது. அதில் ரைட்டராக இருந்த ஏட்டு ஒருவர் லஞ்சம் பெற்றது உறுதியாகி கைதானார்.

கோவை மாவட்டம், செட்டிபாளையம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வருபவர், ரமேஷ். இவர் பாஸ்போர்ட் தொடர்பாக விண்ணப்பிக்கும் நபர்களை, விசாரித்து பரிந்துரைக்கும் பணிகளை செய்து வருகிறார். காவல் நிலைய எழுத்தராகவும் ...