இந்தியா, மார்ச் 19 -- "பாவம் பால்வளத்துறையை கொல்லாதீங்க, விட்டுடுங்க..!" என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க தலைவர் சு.ஆ பொன்னுசாமி வேதனை தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் தற்போது நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த பால்வளத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்கள் தமிழ்நாட்டில் பால் விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆட்சியை விட தற்போது 11 லட்சம் லிட்டர் கூடுதலாக பால் கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் பதில் அளித்த செய்தியை படித்த போது அழுவதா..? இல்லை சிரிப்பதா..? என தெரியவில்லை.

ஏனெனில் தமிழ்நாட்டில் பால் விற்பனை நேரம் என்பது கனமழை பெய்து, பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் காலங்களில் மட்டுமல்ல கொர...