இந்தியா, பிப்ரவரி 23 -- பாலிவுட்டின் பெண் சூப்பர் ஸ்டார்: பாலிவுட்டின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் எனப் போற்றப்படும் நடிகை ஸ்ரீதேவி இப்போது நம்மிடையே இல்லை. ஆனால், அவரது புகழ்பெற்ற நடிப்பினை இன்றும் நினைத்து வருத்தப்படுபவர்கள் உண்டு.

நடிகை ஸ்ரீதேவி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்துமொழிகளில் 50 ஆண்டுகள் கோலோச்சிய நடிகையாக இருந்தவர்.

தமிழ் சினிமாவில் இருந்து இந்தி சினிமாவில் அறிமுகமான ஸ்ரீதேவி, பாலிவுட்டில் ஒரு இடத்தை பிடிப்பது எளிதான விஷயமில்லை. இந்தி பேச சிரமப்பட்டாலும், தனது நடிப்பின் மூலம் பல வெற்றிகளைப் பாலிவுட்டில் பெற்றவர்.

நடிகை ஸ்ரீதேவியின் நடிப்பு ஒவ்வொரு படத்திலும் பாராட்டப்பட்டது. ஆனால், அவர் நல்ல நடிகை என்ற பெயரை ஜிதேந்திராவுடன் நடிக்கும்போதும், கமல்ஹாசனுடன் நடிக்கும்போதும் பெற்றார்.

அதன்பிறகு, அவர் பாலிவுட்ட...