மதுரை, ஏப்ரல் 4 -- நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட 'வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. மேலும் பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, பாலஸ்தீன உடையான ஃகபியே அணிந்து, கோஷமிட்டு ஆதரவு தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றினர். அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் எம்.ஏ.பேபி முன்மொழிய, அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் அதை வழிமொழிந்தார்.

மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில், வெள்ளியன்று (ஏப்.4) பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. குறிப்பாக வக்ஃப் சட்டத்திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நாட்டின் அனைத்து மதச்சார்பற்ற மக்களும் அமைப்புகளும் இந்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட வேண்டும் என்று அழைப்பு விடுக்கப்ப...