இந்தியா, மார்ச் 8 -- பாரதி ராஜா மூன்று படங்களுக்கு குறைவான அளவே சம்பளம் பெற்றார் என்றும்; இரண்டே நாட்களில் ''புதிய வார்ப்புகள்" படத்துக்கு வசனம் எழுதி முடித்த பாக்யராஜ் குறித்தும் தயாரிப்பாளரும் பாரதிராஜாவின் சகோதரருமான ஜெயராஜ் பேசிய பேட்டியினைக் காணலாம். இவர் சமீபத்தில் சின்ன மருமகள் என்னும் விஜய் டிவியில் வரும் சீரியலில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அத்தகைய ஜெயராஜ் அவர்களுடைய பேட்டி டூரிங் டாக்கிஸ் யூடியூப் சேனலில் மார்ச் 5ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டது. அந்தப் பேட்டியின் தொகுப்பு:

நான் அரசு பிரஸ்ஸில் வேலைபார்த்துக்கிட்டு இருந்தேன். நான் முதலில் சினிமாவில் நுழைந்தது சிகப்பு ரோஜாக்கள் படத்தில் தான். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் போன்ற படங்களை எல்லாம் பாரதி ராஜா முடிச்சிட்டு வந்திட்டார். சிகப்பு ரோஜாக்கள் பாரதி ராஜாவுக்கு ம...