இந்தியா, மே 30 -- பாமக பொருளாளர் பதவியில் இருந்து திலகபாமாவை டாக்டர் ராமதாஸ் நீக்கிய நிலையில், அவர் அப்பதவியில் தொடர்வார் என அன்புமணி அறிவித்து உள்ளார்.

பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையே கருத்து மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கட்சியின் பொருளாளர் திலகபாமாவை ராமதாஸ் நீக்கிய நிலையில், அன்புமணி அவரை மீண்டும் பொருளாளராக நியமித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த மோதல் கட்சியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.

பாமகவின் பொருளாளராக இருந்த திலகபாமாவை டாக்டர் ராமதாஸ் பதவியில் இருந்து நீக்கி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதே நேரத்தில் சென்னை பனையூரில் நடைபெற்ற கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், அன்புமணி ராமதாஸ் திலகபாமாவை பொருளாளராக தொடர்ந...