இந்தியா, ஏப்ரல் 6 -- இயக்குநரும் நடிகருமான செல்வராகவன், சினிமாவில் பான் இந்தியா கலாச்சாரத்தால் நல்ல படங்களின் வருகையும், மக்களின் ரசனையும் செத்தே போய்விட்டதாக தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கோபிநாத்திற்கு அளித்த பேட்டியில் இதுபற்றி தன் கருத்துகளை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த காலத்துல ஒரு இயக்குநரா என் படத்த நான் ஒரு கோணத்துல எடுத்திருப்பேன். அதை அப்படியே ஒரு நொடில கொதறி போட்டுட்டு போயிட்டே இருக்காங்க. அந்த படம் பத்தி நான் வாட்ஸ் அப்ல பேசிட்டு இருக்கும் போதே, என் வாழ்க்கையே முடிஞ்சு போயிடுது. ஒரு 5 நிமிஷம் டைம் எடுத்து அவன் என்ன சொல்ல வர்றான்னு காது கொடுத்து கூட கேக்க யாருக்கும் நேரம் இல்ல.

இப்ப இருக்க எல்லாமே கமர்ஷியல் படம் தான். ஒரு குத்து பாட்டு இருக்கணும், ஒரு சண்ட இருக்கணும். இப்படி இருந்தா ஒரு சினிமா எடுக்குறதுக்கான தக...