இந்தியா, மே 5 -- 'திமுக ஆட்சியில் வணிகர்கள் மீதான தாக்குதல் சம்பவம் அதிகரித்துவிட்டது' என வணிகர் சங்க நிகழ்ச்சியில் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

மறைமலை நகரில் கொளத்தூர் ரவி தலைமையில் நடந்த தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரவையின் 42-வது வணிகர் தின விழா மற்றும் வணிக பாதுகாப்பு மாநாட்டில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார். திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்த அவர், வணிகர்களின் நலனைப் பாதுகாக்க அதிமுக எப்போதும் உறுதுணையாக இருக்கும் என வாக்குறுதி அளித்தார்.

மேலும் படிக்க:- 'பாஜக கூட்டணியிலிருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா?' ஆர்.எஸ்.பாரதி கேள்வி

வணிகர்களை "நாட்டின் பொருளாதார முதுகெலும்பு" எனப் புகழ்ந்த ஈபிஎஸ், விவசாயிகளின் உற்பத்தி மற்றும் த...