இந்தியா, ஏப்ரல் 14 -- அதிமுக - பாஜக கூட்டணி காரணமாக அதிமுகவில் இருந்து விலகியதாக வெளியான செய்திகளுக்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயகுமார் மறுப்பு தெரிவித்து உள்ளார்.

ஜெயக்குமார், திமுக ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 2006-2011 காலகட்டத்தில் தமிழ் புத்தாண்டை சித்திரை மாதத்திலிருந்து தை மாதத்திற்கு மாற்றியதை கடுமையாக விமர்சித்தார். இது தமிழர் பண்பாடு மற்றும் மரபுக்கு எதிரானது எனக் கூறிய அவர், 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சித்திரை மாதத்தை மீண்டும் தமிழ் புத்தாண்டாக அறிவித்ததை நினைவுகூர்ந்தார். 2012ல் சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முதல் தமிழ் புத்தாண்டு விழாவிற்கு தாம் தலைமை தாங்கியதை பெருமையுடன் குறிப்பிட்டார்.

அண்ணல் அம்பேத்கரின் 135வது பிறந்தநாளையொட்டி, அவரது புகழையும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரி...