சென்னை, ஏப்ரல் 1 -- பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தொடர்பாக விமர்சனம் செய்த தவெக தேர்தல் மேலாண்மை செயலாளர் ஆதவ் அர்ஜூனாவிற்கு, அவரது மைத்துனரும், பிரபல லாட்டரி அதிபருமான மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அது தொடர்பாக, அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கை இதோ:

''தமிழக மக்களின் நலனுக்காக அயராது பாடுபடும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு எதிரான ஆதவ் அர்ஜூனாவின் அறிக்கைக்கு, எனது ஆட்சேபனையையும், மன்னிப்பையும் தெரிவித்துக் கொள்கிறேன். என் தந்தையின் பணத்தை தவறான வழிகளுக்கு பயன்படுத்திக் கொண்டே எங்கள் குடும்பத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகிறார். அவருக்கு இருக்கும் பதவி, பொருளாதார பேராசையை தீர்த்துக் கொள்ள, பிரசாந்த் கிஷோருடன் கூட்டணி அமைத்துக் கொண்டு பல கட்சிகளில் இணைந்து வருகிறார்.

அவர் செய...