இந்தியா, ஏப்ரல் 23 -- காஷ்மீர் பஹல்காமுக்கு சுற்றுலா சென்ற அப்பாவி மக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத்தாக்குதலில் கிட்டத்தட்ட 26 பேர் பலியாகி இருக்கின்றனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து இந்தியா ராணுவம் நடத்திய தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரபலங்கள் பலரும் கண்டன குரல்கள் எழுப்பி வரும் நிலையில், நடிகர் பார்த்தபன் இது குறித்து தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

அந்தப்பதிவில், ' படிப்பறிவு இல்லாத சில உலோக தோட்டாக்கள் காஷ்மீரில் பல அப்பாவி பொது மக்களின் உயிரை துளைத்திருப்பது மனதை உலுக்கியது! உலகமே ஒரு உன்னதப் புத்தகம். உற்று நோக்கி நேசிக்கக் கூடிய பறந்து விரிந்த திறந்...