நாமக்கல்,சேந்தமங்கலம், செப்டம்பர் 19 -- மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் எழுச்சிப்பயணத்தில் இன்று ராசிபுரம் தொகுதியில் மக்களை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அடுத்ததாக சேந்தமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அக்கியம்பட்டியில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே உரையாற்றினார்.

"விடாமல் மழை பெய்தாலும் என் உரையை கேட்டுவிட்டுத்தான் செல்வோம் என்று காத்திருக்கும் மக்களுக்கு நன்றி. மழை பெய்தாலும் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக நிற்போம் என்று சொல்லும் மக்களுக்கு எத்தனை நன்றி சொன்னாலும் தகும்.

திமுக ஆட்சியின் 52 மாதத்தில் சேந்தமங்கலம் தொகுதிக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா? அதிமுக ஆட்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை, ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். விவசாயிகள் எந்நேரமும் ம...