டெல்லி, செப்டம்பர் 9 -- அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பிய முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், அதிமுகவின் உயர் பதவிகளிலிருந்து விலக்கப்பட்டார். மீண்டும் மனம் திறப்பதாக அவர் தெரிவித்த நிலையில், திடீரென வடக்கே ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக அறிவித்து, கிளம்பினார். இந்நிலையில், அவரது பயணம் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுப்பட்டது.

இதற்கிடையில் நேற்று இரவு, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகின.

ஆனால் டெல்லியில் அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு ஏதும் நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தல் தொடர்பான ஆலோசனையில் மத்திய அமைச்சர் அமித் ஷா மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும், இந்த நேரத்தில் செங்கோட்டையனை...