இந்தியா, மார்ச் 8 -- பால் பொருட்கள் வாங்காத பாலகங்களுக்கு ஆவின் பால் விநியோகம் நிறுத்தப்படுவதாக ஆவின் அதிகாரிகளுக்கு பால் முகவர்கள் சங்கம் குற்றம்சாட்டி உள்ளது.

இது தொடர்பாக பால் முகவர்கள் சங்கத்தின் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆவினில் FRO எனப்படும் (Franchisees Retail Outlets) நேரடி வர்த்தக தொடர்பு ஆவின் பாலகங்கள் நடத்தும் பால் முகவர்கள் பல நாட்களாக ஆவின் பால் பொருட்கள் வாங்கவில்லை என்பதை காரணம் காட்டி சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள பால் முகவர்களுக்கு ஆவின் பால் விநியோகத்தை நேற்று முதல் நிறுத்த வட்டார அலுவலக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளதை வன்மையாகக் கண்டிப்பதோடு, குளிர்சாதன அறையில் அமர்ந்து கொண்டு உண்மையான கள நிலவரம் என்னவென்றே தெரியாமல் உத்தரவிடும் ஆவின் உயரதிகாரிகளின் வாய்மொழி உத்தரவை வேதவாக்காக கருதி...