இந்தியா, மார்ச் 3 -- நடிகை தொடர்பான வழக்கில் சமரசத்திற்கு வாய்ப்பில்லை என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை அளித்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட வழக்கை விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சீமான், நாங்கள் முதலில் தடைதான் கேட்டு இருந்தோம். அதன் பிறகு வழக்கை அழிப்பதற்கான நகர்வு நடக்கும். உயர்நீதிமன்றத்திலேயே இதே கோரிக்கை வைத்து இருந்தோம். இது ஆதாரம் இல்லாத அவதூறு வழக்கு. அதனால்தான் இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தேன். இடைக்கால தடையை வரவேற்கிறேன், இனி சட்டப்படி அடுத்த நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்

உடன்பாடு என்றால் என்ன, எனக்கு புரியவில்லை....