டெல்லி, ஏப்ரல் 17 -- புதுடில்லி: ஜனநாயக சக்திகள் மீது அணு ஆயுத ஏவுகணையை உச்ச நீதிமன்றம் ஏவ முடியாது என, துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கர் கடும் வார்த்தைகளால் சாடியுள்ளார்.

ஆளுநரின் பரிசீலனைக்காக ஒதுக்கப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஜனாதிபதிக்கு ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க உச்சநீதிமன்றம் முயன்ற சில நாட்களுக்குப் பிறகு, மாநிலங்களவை பயிற்சியாளர்களிடம் பேசிய தன்கர், நீதித்துறை மீது கடுமையான வார்த்தைகளால் விமர்சனம் முன் வைத்தார்.

மேலும் படிக்க | 'நீதிபதிக்கு ஒரு நியாயம்.. சமானியனுக்கு ஒரு நியாயமா?' நீதித்துறை மீது துணை ஜனாதிபதி பாய்ச்சல்!

"எனவே, எங்களிடம் சட்டமியற்றும் நீதிபதிகள் உள்ளனர், அவர்கள் நிர்வாக செயல்பாடுகளைச் செய்வார்கள், அவர்கள் சூப்பர் நாடாளுமன்றமாக செயல்படுவார்கள், மேலும் நாட்டின் சட்டம் அவர்களுக்கு பொருந்தாது என்பதால் அவர்களுக்...