மதுரை,திருப்பரங்குன்றம், பிப்ரவரி 5 -- திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக, மதுரை மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி., சு.வெங்கடேசன் தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அறிக்கையில் மாவட்ட நிர்வாகம், பாஜகவை கடுமையாக சாடியுள்ளார். இதோ அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

''திருப்பரங்குன்றத்தை மையப்படுத்தி எழுப்பட்டுள்ள பிரச்சனை முருகப்பெருமான் சம்பந்தப்பட்டதோ, மலை சம்பந்தப்பட்டதோ, சிக்கந்தர் தர்ஹா சம்பந்தப்பட்டதோ அல்ல, முழுக்க முழுக்க பாஜக-வின் வெறுப்பு அரசியல் சம்பந்தப்பட்டது. பாஜக வின் வெறுப்பு அரசியலை முறியடிக்கும் வலிமை திருப்பரங்குன்றத்து மக்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் உண்டு.

திருப்பரங்குன்றம் மலையை வைத்து இந்துத்துவா கும்பல் தங்களின் மதவெறி நிகழ்ச்சி நிரலை அரங்கேற்ற கடுமையாக முயற்சி செய்து வருகின்றன. 90-களில் இராமகோபாலன...