டெல்லி,மும்பை,சென்னை, ஏப்ரல் 17 -- உச்ச நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா இல்லத்தில் அதிக அளவில் பணம் கண்டுபிடிக்கப்பட்ட வழக்கில், எஃப்ஐஆர் பதிவு செய்யப்படாதது குறித்து துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டத்திற்கு அப்பாற்பட்ட ஒரு பிரிவுக்கு குற்றச்சாட்டில் இருந்து விலக்கு கிடைக்குமா? என்றும் அவர் கடுமையாக விமர்சித்தார்.

மேலும் படிக்க | மத்திய அரசுக்கு ஒரு வாரம் அவகாசம்.. வக்ஃப் திருத்தச் சட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியது என்ன?

'அது (பணம் கண்டுபிடிப்பு) ஒரு சாதாரண மனிதனின் வீட்டில் நடந்திருந்தால், எஃப்ஐஆர் பதிவு செய்வது மின்னல் வேகத்தில் இருந்திருக்கும். ஆனால் இந்த வழக்கில் அது எருமை வண்டி வேகத்தில்கூட இல்லை' என்று அவர் கடுமையாக சாடினார். ஏழு நாட்கள் வரை யாருக்கும் இது பற்றித் தெரியவில்லை. நாம் நம்மை நாமே கேள்வி கேட...