இந்தியா, ஏப்ரல் 5 -- நீட் தேர்வு பயத்தில் ஒரு மாதத்தில் நான்காவது உயிர் பலி ஆன நிலையில் மாணவர்களைக் காக்க அரசு என்ன செய்யப் போகிறது? பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி சக்தி புகழ்வாணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவி சக்தி புகழ்வாணி அண்மையில் தான் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி முடித்து விட்டு, முடிவுக்காக காத்திருந்தார். அத்துடன் நீட் தேர்வுக்காகவும் தனிப்பயிற்சி பெற்று வந்தார்...