இந்தியா, பிப்ரவரி 23 -- ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட விவகாரத்தில் முடியாமல் தொடரும் அத்துமீறலுக்கு முடிவு கட்டவேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் அவர்கள் மீன்பிடிக்கச் சென்ற 5 விசைப்படகுகள் சிங்கள கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் மீது சிங்கள கடற்படையினர் தொடர்ந்து நடத்தி வரும் அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மேலும் படிக்க:- 'கல்வித்துறையில் ஒன்றிய அரசு எதேச்சதிகாரமாக ஆதிக்கம்' விளாசும் வைகோ!

தமிழ்நாட்டு மீனவர்கள் வங்கக் கடலில் எல்லைத் தாண்டி மீன்பிடிக்கும் விவகாரத்தை வாழ்வாதாரம் சார்ந்த மன...