Chennai, மார்ச் 7 -- தமன்னாவின் பேட்டி: நடிகை தமன்னா மற்றும் விஜய் வர்மா இருவரும் தங்களது இரண்டு வருட காதலுக்கு குட்பை சொல்லிவிட்டதாக செய்திகள் வலம் வந்த வண்ணம் உள்ளன.

இந்தச்செய்தி குறித்து இருவரும் இதுவரை வெளிப்படையாகப் பேசவில்லை என்றாலும், சமீபத்தில் காதல் மற்றும் உறவு குறித்து அவர் கூறிய கருத்துகள் வைரலாகி வருகின்றன.

பிரபல யூடியூபர் லூக் கோட்டினோ என்பவரின் பாட்காஸ்டில் நடிகை தமன்னா பேசுகையில், காதல் மற்றும் உறவு இடையே உள்ள வித்தியாசத்தை தனது பிரேக்-அப் வதந்திகளுக்கு இடையே பேச முயன்றார்.

அப்போது பேசிய நடிகை தமன்னா, காதல் என்பது நிபந்தனையற்றது என்றும், அதே உறவு ஒரு வகையில் வணிகப் பரிவர்த்தனை போன்றது என்றும் அவர் கூறினார்.

இதுதொடர்பாகப் பேசிய நடிகை தமன்னா, "காதல் என்றால் என்ன, உறவு என்றால் என்ன என்று நிறைய பேருக்கு குழப்பம் ஏற்படுகிறத...