செங்கம், ஆகஸ்ட் 16 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாலர் எடப்பாடி பழனிசாமி. இன்று செங்கம், கீழ்பென்னாத்தூர், திருவண்ணாமலை ஆகிய தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். முதலில் செங்கம் பழைய பேருந்து நிலையம் அருகே கூடியிருந்த மக்களிடம் இபிஎஸ், ''செங்கம் தொகுதியில் அதிமுக வெற்றி பெறும் என்பதற்கு இந்த மக்களின் ஆரவாரமே சாட்சி. திமுக ஆட்சியின் 51 மாதம் வீணடிக்கப்பட்டுவிட்டது. நிறைய திட்டங்கள் கொடுத்திருக்கலாம், எதுவுமே கொண்டுவரவில்லை.

அதிமுக ஆட்சி விவசாயிகளின் பொற்கால ஆட்சியாக இருந்தது. விவசாயிகளுக்கு இரண்டு முறை பயிர்க்கடன் தள்ளுபடி செய்தோம். குடிமராமத்துத் திட்டம் கொண்டுவந்தோம், 24 மணி நேரமும் பயன்படுத்தும் வகையில் மும்முனை மின்சாரம் கொடுத்தோம். பயிர்க்காப்பீடு திட்டத்தில் விவசாயிகளை இணைத்து இழப்பீடு பெ...