Chennai, ஏப்ரல் 26 -- கலாட்டா பிங்க் கோல்டன் கியூன் விருது வழங்கும் விழாவில் நடிகை ரம்பா மேடை ஏற்றப்பட்டார். அப்போது நடிகை ரம்பா, நடிகர் பார்த்திபன் மற்றும் நடிகர் விவேக் இணைந்து நடித்து பிரபலமான ஒரு ஸ்வீட் ஸ்டாலே ஒரு ஸ்வீட் சாப்பிடுகிறதே என்னும் காமெடி ரீ-கிரியேட் செய்யப்பட்டது. குறிப்பாக, தொகுப்பாளரும் மிமிக்ரி கலைஞருமான அஸார் நடிகர் விவேக் போல பேசிக்காட்டி அதை ரீ- கிரியேட் செய்தார்.

அப்போது, நடிகர் விவேக் கொடுப்பதுபோலவே, ஒரு சாய்பாபா போட்டோ நடிகை ரம்பாவுக்கு பரிசாக கொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நடிகை ரம்பா, மறைந்த நடிகர் விவேக் குறித்து கண்கலங்கி விழாமேடையில் பேசினார். அதில், ' விவேக் சாரே இருந்து கொடுத்து இருந்தார் என்றால் ரொம்ப சிரிச்சு இருப்பேன். இப்பவும் சிரிக்கிறேன். ஆனால் கண்ணீர் வருகிறது' என்றார்.

'விவேக் சார் இல்லை என்று...