இந்தியா, மார்ச் 18 -- தமிழ் சின்னத்திரையில், முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று இதயம். ரிச்சர்ட், ஜனனி அசோக் குமார் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் இந்த சீரியலின் முதல் பாகம் முடிவடைந்து, வரும் திங்கள் முதல் இரண்டாவது பாகம் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

மேலும் படிக்க | HT Exclusive: திருப்பிப்போட்ட ட்ராவல்.. "விலாக் போட்டு சம்பாதிக்கிற பணம் தேவையில்லை"- ஜனனி அசோக்குமார் பளார் பேட்டி!

இந்த சமயத்தில் இரண்டாம் பாகத்தில் பாரதியாக ஜனனி அசோக் குமார் தொடரப்போவதில்லை என்பதை அவரே அறிவித்துள்ளார். ஆமாம், தனது அடுத்தகட்ட பயணத்திற்காக இதயம் சீரியலில் இருந்து வெளியேறுவதாகவும், தன்னை பாரதியாக ஏற்று கொண்டவர்களுக்கும் தனக்கு இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த...