இந்தியா, பிப்ரவரி 23 -- பிரதீப் ரங்கநாதன் பேட்டி: நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்து சமீபத்தில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் தமிழ்த்திரைப்படம், டிராகன். கல்லூரியில் நடந்த மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் படம் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

இப்படம் தொடர்பான புரொமோஷனுக்காக, டிராகனில் நடித்த நடிகர் பிரதீப் ரங்கநாதன், நடிகை கயாடு லோஹர் மற்றும் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து அனைவரும் கூட்டாக பிஹைண்ட்வுட்ஸ் யூட்யூப் சேனலுக்குப் பேட்டியளித்துள்ளனர். அவற்றின் தொகுப்பு:

''எப்படி காலேஜில் இருந்தீங்க:

அஸ்வத் மாரிமுத்து: நாங்க படிச்ச காலேஜ் சும்மா காலேஜ் எல்லாம் இல்லை. 96% விழுக்காடுக்கு மேல் எடுத்தால் தான் காலேஜில் சீட். 12ஆவது படிக்கும்போது நான் 1200க்கு 1141 மார்க் எடுத்தபையன். பிர...