இந்தியா, ஏப்ரல் 19 -- நடிகர்கள் கமல்ஹாசன், த்ரிஷா கிருஷ்ணன் மற்றும் சிலம்பரசன் (சிம்பு) ஆகியோர் மணி ரத்னம் இயக்கிய 'தக் லைஃப்' படத்தில் நடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் படத்தின் விளம்பரத்தில் பிஸியாக உள்ளனர். இந்நிலையில், சென்னையில் நேற்று நடைபெற்ற தக் லைஃப் பட புரொமோஷன் விழாவில் நடிகர்களிடம் திருமணம் பற்றிய அவர்களின் கருத்து கேட்கப்பட்டது, அப்போது கமல் இரண்டு முறை திருமணம் செய்து கொண்டது பற்றி பேசினார்.

மேலும் படிக்க| இது அரசியல் அல்ல.. கொண்டாட்டத்திற்கான மேடை.. பட்டம் தொடுத்து சம்பவம் செய்த கமல் ஹாசன்

நிகழ்ச்சியின் தொகுப்பாளர் நடிகர்களிடம் திருமணம் பற்றிய அவர்களின் கருத்தை கேட்டார். திரிஷா, "எனக்கு திருமணத்தில் நம்பிக்கை இல்லை. நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி" என்று பதிலளித்தார். கமலிடம் அதே கேள்வி கேட்கப்பட்டபோது, அவர் 10 ஆண்டுகள...