இந்தியா, ஏப்ரல் 22 -- தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன்' திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன், யூபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாடு தரவரிசையில் முதலிடம் பெற்றதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

இந்த வெற்றி, திட்டத்தின் திறனை உறுதிப்படுத்துவதாகவும், பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துவதற்கு இது ஒரு சாட்சியாக அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற சிவச்சந்திரன், யூபிஎஸ்சி தேர்வில் தமிழ்நாட்டு தரவரிசையில் முதலிடம் பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தத் திட்டம் வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது," என்று முதலமைச்சர் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக தனது 'எக்ஸ்' வலைத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவி...