இந்தியா, மார்ச் 10 -- மாஃபா பாண்டியராஜன் உடனான பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று, நான் அவரை பற்றி பேசவே இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி தெரிவித்து உள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார்.

பழக்கத்தில் உள்ளதை மாற்றக் கூடாது. தேவையில்லாமல் மொழி பிரச்னையில் தலையிடக் கூடாது. இதனால் பிரச்னைகள் உருவாகும். மத்திய அரசு அழுத்தம் தருவது தமிழகத்தில் தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்க அடித்தளமாக இருக்கும்.

எந்த கட்சி வளர்ந்தாலும், அதிமுக, திமுகவுக்கு தனிப்பெருமான்மை கிராம புறங்களில் உண்டு. திமுகவை வீழ்த்தும் தகுதி அதிமுகவுக்குதான் உண்டு, மற்ற கட்சிகள் வரலாம். அந்த கட்சியின் வளர்ச்சி தேர்தலை சந்தித்த பிறகுதான் தெரியும்.

அது முற்றுப்புள்ளி வைத்தாகிவிட்டது....