இந்தியா, மார்ச் 4 -- அனிதா குப்புசாமியின் காதல் கதை: தமிழகத்தில் நாட்டுப்புறப்பாடல்கள் பாடுவதில் பலர் தம்பதி சமேதராகவே உள்ளனர். அப்படி ஒரு பாட்டு தம்பதி தான், புஷ்பவனம் குப்புசாமி மற்றும் அனிதா குப்புசாமி. காதல் திருமணம் முடித்து 32 வருடங்கள் குடும்ப வாழ்க்கையினையும் இசை வாழ்க்கையையும் வெற்றிகரமாக நிர்வகிக்கும் அனிதா குப்புசாமி மற்றும் புஷ்பவனம் குப்புசாமி இடையே காதல் எப்படி திருமணத்தில் முடிந்தது என்ற சுவாரஸ்யப் பேட்டியினை கலாட்டா பிங்க் யூடியூப் ஊடகம் பிப்.18ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது. அதன் தொகுப்பினைக் காணலாம்.

அனிதா குப்புசாமி: 32 வருடங்கள் ஆகிடுச்சு

புஷ்பவனம் குப்புசாமி: ஒன்றே ஒன்று தான். அன்றைக்கு இருந்த அதே அன்பு, இன்றைக்கும் இருக்கிறது. அன்றைக்கு இருந்த அதே காதல் இன்றைக்கும் இருக்கிறது.

அனிதா குப்புசாமி: 18, 16 வயசில் எப்படி ...